கூகுள் பே உள்ளிட்ட UPI சேவைகளுக்குத் தடை?
UPI பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15 முதல் புதிய கட்டண விதிகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் உள்ளிட்ட துறைகளுக்கான பரிவர்த்தனைகள் மற்றும் சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்றும், சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர் பணப் பரிமாற்றங்களுக்கு சில விலக்குகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
UPI சேவைகளுக்குச் சேவை வரி விதிப்பதை எதிர்த்து, வரும் 12ஆம் தேதி கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை ஏற்கப்போவதில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. அன்றைய தினம் வாடிக்கையாளர்களிடம் ரொக்கமாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply