25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  அவர்கள் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தினை தொடங்கி வைத்து, 12 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4.28 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தினை தொடங்கி வைத்து, 12 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4.28 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I  A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தினை தொடங்கி வைத்து, கடன் உதவிகளை (29.10.2026) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு  ரூ.3.14 கோடி கடனுதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.33.86 இலட்சம் மானியத் தொகைக்கான  ஆணைகளையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ.47.20 இலட்சம் கடனுதவியையும், மகளிர் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதிகளையும் என மொத்தம் 12 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4.28 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை  அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு சட்டசபையில் அறிவித்த இந்த திட்டத்தினை நமது மாவட்டம் சிவகாசியில் தொடங்கி வைப்பது பெருமையாக உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் இன்று கூட பெண்கள் சிறு  தொழில்களை வீட்டிலேயே செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வந்து மிகப்பெரிய தொழில் முனைவராக உருவாக வேண்டும்.

வளர்ந்து வரும் நம் நாட்டில் பெரிய நிறுவனங்களின் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனை குறு, சிறு  தொழில்கள் மூலம் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 இலட்சமும் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. முதல் முறையாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி அல்லது சேவை தொழில் தொடங்குவதற்கான திட்டமிடுதல் தொடர்பாக 15 நாட்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் மானியமும், முதல் முறை தொழில் தொடங்கும் மகளிருக்கு 30 சதவீதமும், ரூ.1 கோடி மதிப்பிற்கு கீழ் இயந்திரம் வாங்கும் தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு தொடர்புடைய அலுவலர்களை அணுகலாம்.

எனவே தமிழ்நாட்டின் பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தினை பெண்கள் பயன்படுத்திக் கொண்டு தொழில் துறையில் உங்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவை நினைவாக்கிட வேண்டும் என  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக பொது மேலாளர் திரு.தே.துரைராஜ், துணை பொது மேலாளர் திரு.பழனிவேல், மண்டல மேலாளர் திரு.ம.பட்சிராஜா, மேலாளர் திருமதி ஜெ.நித்யா, அரசு அலுவலர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News