.ப்ரோக்கோலி கட்லெட்
தேவையான பொருட்கள்
1 ப்ரோக்கோலி, 2 உருளைக்கிழங்கு,1 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
தேவையான அளவுஉப்பு, சோள மாவு கரைசல்,பிரெட் தூள்
சிறிதளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது.
செய்முறை
ப்ரோக்கோலியை சில நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும் ,வேக வைக்க கூடாது. பின் நன்றாக தண்ணீரை வடிகட்டி மசித்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.குக்கரில்2or3 விசில் வரும் வரை உருளைக் கிழங்கினை நன்றாக வேகவிடவும். பின் நன்றாக மசித்து எடுத்து கொள்ளவும்.மசித்த ப்ரோக்கோலி மற்றும் உருளைக்கிழங்கு வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லிஇலை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.சிறிதளவு எடுத்து வடை போல் தட்டவும்(விருப்பமெனில் துருவிய சீஸ் யை உள்ளே வைத்து உருண்டை போலவும் செய்யலாம்.)1tablespoon சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை வைக்கவும்.பொன்னிறமாக வருமளவிற்கு திருப்பி விட்டு எடுத்தால் சுவையான ப்ரோக்கோலி கட்லெட் தயார்.
0
Leave a Reply