பொது மக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை.
சைபர் குற்றவாளிகள், பொதுமக்களுக்கு தெரிந்தவர்களின் குரல் அல்லது முகத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் அச்சு அசலாக உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெரிந்த நபர்களைப் போல பேசி, அவசரமாக பண உதவி தேவைப்படுவதாகக் கூறி நம்ப வைக்கும் சைபர் குற்றவாளிகள், பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகின்றனர்.
எனவே, தொலைபேசி அழைப்பு, வீடியோ அழைப்பு அல்லது சமூக வலைதளங்கள் மூலம் வரும் இதுபோன்ற அவசர பண உதவி கோரிக்கைகளை உடனடியாக நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
0
Leave a Reply