சிவப்பு இறைச்சி... குடல் ஆரோக்கியத்திற்கு எச்சரிக்கை!
சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது குடல் அழற்சி நோயின் தீவிரத்தை அதிகரிக்கக்கூடும் என்று சீனாவின் கேபிடல் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து சிவப்பு இறைச்சி உணவாக வழங்கப்பட்ட குழுவில் குடல் அழற்சி அதிகமாக இருந்தது. இதற்கு, நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்கள் குறைவதும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதும் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே குடல் அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் சிவப்பு இறைச்சியை அளவோடு மட்டுமே உட்கொள்வது நல்லது எனவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்
0
Leave a Reply