கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ்: நீரிழிவு அபாயத்தில் உதவுமா?
கொண்டைக்கடலை மற்றும் கருப்பு பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளாகும்.
நீரிழிவு நோயின் ஆரம்பநிலை அல்லது Prediabetes நிலையில் இருப்பவர்களின் உணவுமுறையில் இத்தகைய பருப்பு வகைகளைச் சேர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அமெரிக்காவின் இலினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
12 வாரங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் வெவ்வேறு உணவுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் அல்லது அரிசி அடிப்படையிலான உணவு வழங்கப்பட்டது.
ஆய்வின் முடிவில், அரிசி உணவை எடுத்துக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, கொண்டைக்கடலை மற்றும் கருப்பு பீன்ஸ் சாப்பிட்டவர்களில் சிலருக்குகெட்ட கொழுப்பு (LDL) மற்றும் அழற்சி தொடர்பான குறிப்பிட்ட அளவுகளில் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், ரத்தச் சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படவில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
இதனால், கொண்டைக்கடலை மற்றும் கருப்பு பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக சேர்ப்பது நல்ல தேர்வாக இருக்கலாம்.
சிறிய உணவு மாற்றங்களும் நீண்ட கால ஆரோக்கியத்தில் பெரிய பங்கு வகிக்கலாம்!
0
Leave a Reply