ராக்கெட் மீட்பில் புதிய சாதனை படைத்த சீனா
சீனா தனது விண்வெளித் திட்டத்தில் மேலும் ஒரு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஜூலை 10-ஆம் தேதி ஏவப்பட்ட 'லாங் மார்ச் 10பி' ராக்கெட்டின் முதல் கட்டத்தை, கடலில் அமைக்கப்பட்ட சிறப்பு வலை அமைப்பின் மூலம் வெற்றிகரமாக மீட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.
ராக்கெட்டின் முதல் கட்டத்தை வலையின் உதவியுடன் மீட்கும் தொழில்நுட்பம் உலகளவில் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ராக்கெட் தயாரிப்பு செலவையும் எடையையும் குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெற்றி, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சீனாவின் திறனை மேலும் உயர்த்தியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
0
Leave a Reply