உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் சிராக்.
அல்பேனியாவில், 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் சிராக் சிக்காரா களமிறங்கினார். இதன் அரையிறுதியில் கஜகஸ்தானின் ஆலன் ஓரல்பெக்கை வென்றார். பின் நடந்த பைனலில் சிராக், கிர்கிஸ்தானின் அப்திமாலிக் கரசோவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்ற சிராக். தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.
இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் கைப்பற்றியது. ரவிக்குமார் 2018 அமன் ஷெராவத்திற்கு 2022 அடுத்து 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆனார் சிராக்.
0
Leave a Reply