தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice)
தேவையான பொருட்கள் :
அரிசி (பாசுமதி அல்லது சீரக சம்பா) - 1 கப்,
கெட்டியான தேங்காய் பால் - 1.5 கப்,
தண்ணீர் - அரை கப்,
நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு,
பிரியாணி இலை – 1,
வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 3 அல்லது 4,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
முந்திரி பருப்பு – சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி
இலை மற்றும் முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். பின்னர்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
1.5 கப் தேங்காய் பால் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பும் போடவும்.
கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில்
விட்டு எடுக்கவும். (அரிசியைப் பொறுத்து 2 விசில் கூட விடலாம்).
பிரஷர் முழுமையாக அடங்கியதும் திறந்தால், மணமான சுவையான தேங்காய் பால் சாதம்
தயார்.
0
Leave a Reply