வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான நபர்கள் மற்றும் இளம்/முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் (Special Drive) மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்திலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுடையவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி செய்து முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S.,அவர்கள் தெரிவித்ததாவது ,இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் (Special Intensive Revision SIR) ஏற்கனவே நிறைவடைந்துள்ள பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான நபர்கள் மற்றும் இளம்/முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் (Special Drive) மேற்கொள்ளப்படவுள்ளது.
இச்சிறப்பு இயக்கமானது தொடர்ச்சியான வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் (Continuous Updation) நடைமுறையின் கீழ் மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO) மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். அதன்படி வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம்பெறாத தகுதியுடையவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி செய்து முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்ற இளம் வாக்காளர்கள், உரிய நடைமுறையைப் பின்பற்றி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும், சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் நடைபெறும் காலப்பகுதியில் மட்டும் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழி படிவம் பயன்படுத்தப்படும். சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் அல்லாத காலகட்டங்களில், வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன் (Registration of Electors Rules 1960) கீழ் பொருந்தக்கூடிய வழக்கமான விண்ணப்பப் படிவங்களே பயன்படுத்தப்படும்.
எனவே, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுடையவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி செய்து முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்ற இளம் வாக்காளர்கள், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, பெயர் இடம்பெறவில்லை எனில் படிவம் 6 மூலம் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனவும், கூடுதல் விவரங்களுக்கு, அருகிலுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) அலுவலகத்தை அணுகலாம் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply