நெய் சோறு (Ghee Rice)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப் (20 நிமிடங்கள் ஊறவைத்தது)
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
முந்திரி மற்றும் திராட்சை - சிறிதளவு
பட்டை - 1, கிராம்பு - 3, ஏலக்காய் - 2, பிரிஞ்சி இலை - 1
புதினா மற்றும் மல்லித் தழை - சிறிதளவு
தண்ணீர் - 1.5 கப் (அரிசி அளந்த அதே கப்பில்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் அல்லது குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
முந்திரி சேர்த்து வதக்கிய பின், நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
புதினா மற்றும் மல்லித் தழை சேர்த்து லேசாக வதக்கவும்.
இப்போது 1.5 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை நீரை வடித்துவிட்டு சேர்க்கவும்.
மிதமான தீயில் மூடி வைத்து அரிசியும் தண்ணீரும் சமமாக வரும் வரை வேகவிடவும்.
பின் குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு எடுக்கவும் (அல்லது பாத்திரமாக இருந்தால்
மூடி போட்டு 10 நிமிடங்கள் தம் வைக்கவும்).
சுவையான மற்றும் மணமான நெய் சோறு தயார்.
0
Leave a Reply