சாத்தூர் இரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து, தொடர்புடைய பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.10.2024) சாத்தூர் இரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து, தொடர்புடைய பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சாத்தூர் இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் மற்றும் நில எடுப்பு பணிகளுக்கான திட்ட வரைவு உருவாக்கப்பட்டது. நில எடுப்பு தொடர்பாக வர்த்தக சங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் கோரிக்கையினை ஏற்று தற்போது திருத்தியமைக்கப்பட்ட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, சாத்தூர் ரயில்வே புதிய மேம்பாலம் சாத்தூர் பக்கம் 270.903 மீட்டர் நிளத்திலும், இருக்கன்குடி பக்கம் 285.902 மீட்டர் நிளத்திலும், இரயில்வே பகுதியில் 45.4 மீட்டர் நீளத்திலும் என மொத்தம் 602.205 மீட்டர் நீளத்தில் அமைய உள்ளது. மேம்பாலத்தின் அகலம் 8.5 மீட்டராகவும், அணுகுசாலையின் அகலம் 11 மீட்டராகவும் அமைய உள்ளது.
சாத்தூர் மற்றும் இருக்கன்குடி பக்கங்களில் இருந்து மொத்தம் 9668.30 சதுரமீட்டர் பரப்பரளவிலான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது. எனவே, அனைத்து தரப்பு வர்த்தக சங்கங்கள் மற்றும் அமைப்புகள், பொதுமக்கள் இந்த மேம்பாலம் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் (திருநெல்வேலி) திரு.லிங்குசாமி, கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply