புதினா செடி வளர்ப்பு
நம் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் புதினா செடிகளை செழிப்பாக வளர வைத்து விட முடியும். இது ஒரு சுலபமான முறை தான்.நான்கு இனுக்கு புதினாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த புதினா இனுக்கின், கீழ் பகுதியில் மட்டும் புதினா இலைகளை கிள்ளி எடுத்து கொள்ளுங்கள். புதினா இனுக்கில், மேலே மட்டும் இரண்டு அடுக்கு இலைகள் இருந்தால் போதும். கீழ் பக்கமாக இருக்கும் 2 அடுக்கு புதினா இலைகளை பறித்து விடுங்கள்(கீழே காம்பு மட்டும் இருக்க வேண்டும். மேலே புதினா இலைகள் லோடு சேர்த்த காம்பு இருக்க வேண்டும்.)
ஒரு டம்ளரில், புதினா இலைகளின் காம்பு பகுதி மட்டும் நீரில் மூழ்கும் அளவிற்கு, தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் அந்த நான்கு புதினா இலைகளின் காம்பானது, தண்ணீரில் மூழ்கியபடி, பத்து நாட்கள் இருக்க வேண்டும். அப்போது அந்த காம்பு பகுதியில், புதினா இனுக்கில், வேர் விட ஆரம்பித்து விடும். புதினாவின் காம்பு பகுதியானது தண்ணீருக்குள்ளேயே இருப்பதனால், புதினா இனுக்கின் மேல் பகுதியில், இருக்கும் இலைகள் வாடாமல் பச்சை பசேலென்று தான் இருக்கும்.
அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரின் நிறம் மாறிவிட்டால் மட்டும், பழைய தண்ணீரை ஊற்றிவிட்டு புதிய தண்ணீர் போட்டு, மீண்டும் அந்த புதினா காம்புகளை தண்ணீரில் போட்டு விடுங்கள். பத்து நாட்கள் கழித்து நன்றாக, புதினா காம்புகளில், வேர் விட்டிருக்கும். வேர் விட்ட அந்த4 புதினா இனுக்குகளை எடுத்து, அகலமான மண் தொட்டியில், நான்கு திசைகளில், நான்கு ஓட்டையைப் போட்டு ஊன்றி விட வேண்டும்.நடுவில் ஒன்றுஅதாவது, ஒரு புதினா இனுக்கை நடுவதற்கும், அடுத்த புதினா இனுக்கை நடுவதற்கும், கொஞ்சம் இடைவெளி விட்டு விடுங்கள். அதன் பின்பு நன்றாக தண்ணீர் ஊற்றி விட வேண்டும். ஒரே வாரத்தில் அந்த வேரானது மண்ணில் ஊன்றி உங்களது புதினா செடி நன்றாக துளிர் விட ஆரம்பித்துவிடும். இரண்டு வாரங்கள் போதும். உங்கள் செடி நன்றாக வளர்வதை பார்க்கலாம்.
மூன்றிலிருந்து நான்கு வாரம் முடிவதற்குள் நீங்கள் நட்டு வைத்த நான்கு புதினா இனுக்கு, அதிகப்படியான கிளைகளை விட்டு, படர்ந்து வளர ஆரம்பித்துவிடும். தினமும் தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். பச்சை பசேலென்ற புதினாவை, இனி கடையில் சென்று வாங்க வேண்டாம். உங்கள் வீட்டுத் தொட்டியில் பூச்சி மருந்து இல்லாமல், இயற்கையான முறையில் வளர வைத்து, பலனடையலாம். வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் புதினாவை சேர்த்து சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது .
0
Leave a Reply