தற்போதைய விளையாட்டு மசோதா
இந்திய விளையாட்டு அமைப்புகளில் ஊழலை ஒழித்து வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, புதிய விளையாட்டு ஒழுங்கு முறை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதா விரைவில் பாரிலிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதன்படி தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளை ஒழுங்குமுறை அமைப்பு கண்காணிக்கும், அங்கீகாரம் நிதி உதவி, நிர்வாகிகளின் வயது வரம்பை முடிவு செய்யும், இந்தியாவில் ஏற்படும் விளையாட்டு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண தீர்ப்பாணை யத்தை அமைக்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கிராமப்புற அளவில் விளையாட்டு வளர்சிக்கு மாநில ஒலிம்பிக் சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், புதிய விளையாட்டு மசோதாவில் மாநில ஒலிம்பிக் சங்கங்களின் நிலை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. அனைத்து அதிகாரமும் ஒழுங்குமுறை அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஒலிம்பிக் சஙகம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் தன்னாட்சி பாதிக்கப்படும் என்றார்.
0
Leave a Reply