மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரி இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாடு தொழில்நுட்ப கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரி இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாடு தொழில்நுட்ப கருத்தரங்கம் நாளை 24.10.2024 மற்றும் 25.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.அதன்படி, நாளை 24.10.2024 பள்ளி மாணவர்களுக்கும், 25.10.2024 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
பள்ளி அளவில் அறிவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்லாது கட்டிடவியல், இயந்திரவியல், உயிரி தொழில்நுட்பம் போன்ற பிற பொறியியல் துறைகளிலும், கலை மற்றும் அறிவியல் துறைகளிலும் செயற்;கை நுண்ணறிவு பொருந்தக்கூடிய வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு மாநாடு தொழில்நுட்ப கருத்தரங்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படை கோட்பாடுகள், அதனை பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள், அதன் சமூக தாக்கம், பொறி கற்றல் புலத்தின் அடிப்படை கோட்பாடுகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் படைப்பாற்றல் மேம்பாடு போன்ற கருத்துக்கள் குறித்து ஆராய்தல் உள்ளிட்டவைகள் குறித்து, செயற்கை நுண்ணறிவுத் துறையில் புகழ்பெற்ற வல்லுநர்களின் விரிவுரைகள் மற்றும் செயல்முறை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுஇக்கருத்தரங்கில் 1000-த்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற இருக்கின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply