25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தடகள பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தடகள பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன்பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர்,வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு, விளையாட்டு வீரர்களின் பின்புலம் மற்றும் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு  அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறை மற்றும் சமவாய்ப்பினை வழங்கிட, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

அதன் படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் தடகள விளையாட்டானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இவ்விளையாட்டு பயிற்சி மையத்திற்கு தடகள (ATHLETICS) பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்களை 23.07.2026 முதல் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும்.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கடைசி நாள் 31.07.2026 மாலை 5.00 மணி ஆகும். விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதித்தேர்வு (05.08.2026) அன்று மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

 நேர்முகத் தேர்வு அன்று உரிய அசல் (ம) நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப்பணியோ கோர இயலாது.மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட மருத்துவ கல்லூரி எதிர்புறம். விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7824009970 / 04562-225947 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனமாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News