25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


கனிம வளங்கள்  கொண்டு  செல்லும்  வாகனங்களில்  GPS  பொருத்தி  MIMAS   இணையதளத்தில்  30.09.2026-க்குள் ஒருங்கிணைக்க  வேண்டும்   என   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கனிம வளங்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் GPS பொருத்தி MIMAS இணையதளத்தில் 30.09.2026-க்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர்  மாவட்டத்தில்  குவாரிகள்,  கிரஷர்  மற்றும்  கனிம  சேமிப்புக் கிடங்குகளிலிருந்து   கனிமங்களை   ஏற்றிச்  செல்லும்   அனைத்து  வாகனங்களிலும் AIS-140  தரத்திலான  GPS (VLTD)  கருவி   பொருத்துவது   கட்டாயமாகும். பொருத்தப்பட்ட  GPS கருவியின்   விவரங்களை  MIMAS  இணையதளத்தில்  பதிவு  செய்து  ஒருங்கிணைப்பு (Integration)  செய்ய வேண்டும்.  GPS கருவி  அரசால் அங்கீகரிக்கப்பட்ட   AIS-140  தரத்திலான நிறுவனங்களிடமிருந்து  மட்டுமே  பொருத்தப்பட   வேண்டும்.

   எனவே,  குவாரி  குத்தகைதாரர்கள்,  கிரஷர்  உரிமையாளர்கள்,  கனிம சேமிப்புக்  கிடங்கு   உரிமையாளர்கள்  மற்றும்   சம்பந்தப்பட்ட   வாகன  உரிமையாளர்கள் தங்களது  வாகனங்களில்  GPS  கருவியை  பொருத்தி,  MIMAS  இணையதளத்தில் ஒருங்கிணைக்கும் பணியை 30.09.2026-க்குள் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  30.09.2026-க்கு  பின்னர்,  AIS-140; GPS  பொருத்தப்பட்டு   MIMAS இணையதளத்தில்  ஒருங்கிணைக்கப்பட்ட  வாகனங்களுக்கு  மட்டுமே கனிமப் போக்குவரத்திற்கான   நடைச்சீட்டு /      அனுமதிச்சீட்டு  வழங்கப்படும்.

  எனவே,   தொடர்புடைய    அனைவரும்     காலதாமதமின்றி    உரிய  நடவடிக்கை மேற்கொண்டு , நிர்ணயிக்கப்பட்ட  காலக்கெடுவிற்குள்  GPS   பொருத்துதல்    மற்றும்  MIMAS    ஒருங்கிணைப்பு   பணிகளை  நிறைவு   செய்ய   வேண்டும்  என  மாவட்ட ஆட்சித்தலைவர்   திருமதி  ஷரண்யா அறி I A S., அவர்கள்   தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News