25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடகக் கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S ,. அவர்கள் தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள்  (08.04.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தேர்தல் பணிகளை முறையாகக் கண்காணிக்கவும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் தொலைபேசி வழியாகப் பெறப்படும் புகார்கள் மற்றும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலம் பெறப்படும் தகவல்கள் பதிவு செய்யப்படுவதைப் பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் தேர்தல் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (MCMC) பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் போது பின்வரும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்:

தேர்தல் பொதுப் பார்வையாளர்கள்:

திரு. உதயன் மிஷ்ரா,I A S.(இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்)திரு. அரவிந்த் மீனா, I A S.(சாத்தூர் மற்றும் சிவகாசி)

திரு. நவநீத் குமார், I A S.,(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை)

திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., (திருச்சுழி)

தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்:

திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்)திரு. அனில்குமார், இ.வ.ப. (சாத்தூர் மற்றும் சிவகாசி)

திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை)

திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப.(திருச்சுழி)

இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்குப் பார்வையாளர்கள் அறிவுறுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News