25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ், 2024-2025 -க்கான பயிர் காப்பீட்டினை விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2024-2025 -க்கான பயிர் காப்பீட்டினை விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)   2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில்  இந்த ஆண்டு (2024-2025) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
காரீப் பருவத்தில் பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள்  அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)  மூலமாகவோ பயிர்களை காப்பீடு  செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு  மக்காச்சோளம்  பயிருக்கு ரூ. 421/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 180/- எனவும், பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.304/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.360/- எனவும் மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ.415/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்  கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு வெங்காயம் பயிருக்கு ரூ.1744/- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.3404/- எனவும் தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் நிலக்கடலை பயிருக்கு 30.08.2024 எனவும், உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு 16.09.2024 எனவும் மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு 30.09.2024 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள்; வெங்காயம் பயிருக்கு 31.08.2024 எனவும், மற்றும் வாழை பயிர்களுக்கு 16.09.2024 எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book)  முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance)  அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC)  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS)  அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News