25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கண்மாய்களுக்கு ஆதாரமான ஷட்டர்களை பழுதையும், கரைகளை மழை தொடங்கும் முன் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்மாய்களுக்கு ஆதாரமான ஷட்டர்களை பழுதையும், கரைகளை மழை தொடங்கும் முன் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வறட்சி மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் நீர் ஆதாரமாக இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சேத்துார், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதி வழியாக ஓடி பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் இவை இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கும்  மேற்பட்ட கிராமங்களின் பாசன விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.கண்மாய்களின் மூலம் மாவட்டத்தில் சுமார் 27, 280 ஹெக்டேர் பாசனம் நடைபெற்று வருகிறது.நீர்வள ஆதாரங்களை பேணிக்காக்கவும் நிலத் தடி நீர்மட்டத்தை பெருக் கவும், மழை நீரை வீண டிக்காமல் சேமிக்கவும் மற்ற பகுதிகளுக்கு திருப்பி விடவும் கண்மாய்களே ஆதாரம். அவசர காலங்களில் கண்மாய்களில் நீரை திருப்பி விடவும், தேங்கியுள்ள தண்ணீரை தேவைக் கேற்ப வெளியேற்றவும் அடைத்து பாதுகாக்கவும் ஷட்டர்களின் பராமரிப்பு முக்கிய பங்காற்றுகிறது.

இதில் ஷட்டர்களை பராமரித்தல் தேவையான இடங்களில் புதிதாக அமைத்தல், தொடர் அழுத்தத்தினால் சேதம் அடைவதை கண்டறிந்து மராமத்து செய்தல் போன்ற பணிகளை மழைக்காலத்திற்கு முன்பே பழுதுகளை தகுந்த இடைவெளியில் சரி பார்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள  வேண்டும் .பல ஷட்டர்கள் போதிய அளவு திறக்க முடியாமல் பயனற்று காணப்படுகின்றன. பருவ மழைக்கு முன்பே கண்மாய் ஷட்டர்களின் பராமரிப்பை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News