இணையம் இல்லாத கிராமத்திலிருந்து நாசா ஒப்பந்தம் வரை... கர்நாடக இளைஞரின் சாதனை.
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்ட கிராமத்தில் இணையம், ஸ்மார்ட்போன் வசதியின்றி வளர்ந்த அவாய்ஸ் அகமது, தனது ஆர்வத்தால் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான பிக்ஸல் (Pixxel)-ஐ தொடங்கினார்.
பிட்ஸ் பிலானியில் படித்த அவர், 2019-ல் நண்பருடன் இணைந்து நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று பிக்ஸலின் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோள்கள் பயிர் பாதிப்பு, மீத்தேன் கசிவு, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாகக் கண்டறிகின்றன.
95 மில்லியன் டாலருக்கும் அதிக முதலீட்டை ஈர்த்துள்ள பிக்ஸல், 2024-ல் நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இணைய வசதி இல்லாத கிராமத்தில் தொடங்கிய அவரது ஆர்வம், உலகளவில் கவனம் பெற்ற வெற்றிக் கதையாக மாறியுள்ளது.
0
Leave a Reply