கோஸ் கட்லட்.
தேவையான பொருட்கள் - 200 கிராம் முட்டைக்கோஸ்,இரண்டு சிறிய துண்டுகள் இஞ்சி,2 பல் பூண்டு,2 சிறிய பச்சை மிளகாய்,3ஸ்பூன் கடலை மாவு,இரண்டு ஸ்பூன்கான்பிளவர்,ஒரு ஸ்பூன்அரிசிமாவு,சிறிதளவுசோம்பு,தேவையான அளவு உப்பு,எண்ணெய் ,சிறிதளவுசில்லி சிக்கன் பவுடர்
செய்முறை -முட்டைக்கோஸை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.பச்சை மிளகாய் ,இஞ்சி, பூண்டு, சோம்பு, இவற்றை விழுதாக அரைக்கவும். அரைத்த கோஸ் கலவையில் இந்த மசாலாவை சேர்த்து கடலை மாவு, கான்பிளவர் அரிசி மாவு ,உப்பு, சில்லி சிக்கன் பவுடர், கருவேப்பிலை, சேர்த்து கிளறவும்.
இந்தக் கலவையை தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் விருப்பப்பட்ட வடிவத்தில் கைகளால் தட்டி நன்கு வேகவிடவும் இருபுறமும் நன்கு வேகவிடவும். இப்பொழுது மிக மிக ருசியான கோஸ்கட்லட் தயார்.
0
Leave a Reply