இடாகினி கதாய அரத்தம் நவீன நாடகம்
ஆனந்தா வித்யாலயாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பிறை தோன்றிய பொழுதில் மணல் மகுடி நாடகநிலத்தின் "இடாகினிகதாய அரத்தம்”நாடகம் தொடங்கியது. ஒன்றைச் சொல்லி அதுஉணர்த்தும் பொருளை, கேட்பவன் கற்பனைக்கே விட்டு விடுவதே படிமம் என்பது. அப்படியான படிமங்களாலும், குறியீடுகளாலும், தொன்மங்களாலும் நேர்த்தியாக நெய்யப்பட்ட நவீன தமிழ் நாடகம்இது. மனிதர்களின் மூச்சுக் காற்று கூட நம்காதுகளில் படபடத்துக் கொண்டிருக்கிறது. புழுதி பறக்க நடந்துகொண்டே இருக்கும் நிராகரிக்கப்பட்ட மனித குலத்தின் காலடிஓசையும், பணி ஓசையும் நம்மைஇம்சித்துக் கொண்டே இருக்கும். முருகபூபதி அவர்களின் நாடகத்தின் மீதான முன்னெடுப்பு முற்றிலும்வித்தியாசமானவை. அவரின் விந்தை நிறைந்தஅறிவுக் கூர்மை நம்மை பெரும்வியப்பில் ஆழ்த்தியது. திரைச் சீலைக் கூடநாடகத்தில் அற்புதமாக நடித்திருந்தது. கலைஞர்களின் முகபாவங்கள். ஏக்கத்தின் குரல் இன்னும் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. மனசை பிசையும் காட்சிகளைகையகப்படுத்த முடியாது.அருமையானநடிகர்கள்! என்ன ஒரு நடிப்பு! தமிழகம் முழுவதும் சல்லடை போட்டு இந்தமுத்துக்களை கோர்த்த இயக்குநர் பாராட்டப்படவேண்டியவர், தத்ரூபமாக நடித்து சாதனை படைத்தஇளம் கலைஞர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். அவர்களின் உழைப்பு அசாதாரணமானது. உடல்மொழி அபாரம். பேச்சு மொழியோஅதனினும் மேலாக இருந்தது. இசையோடுகதையில், சூழல் சார்ந்து சரியானவிழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பது விந்தை. இத்தனைஅழகாக ஒரு வெளியில் ஒருபிரமிப்பை நிகழ்த்த முடியுமா? முடியும் என்கிறார் முருகபூபதி. காலத்தைமுன்னும் பின்னும் நகர்த்தி சித்தரிப்பை உணர்த்தும் பாங்கு பார்வையாளனை இதுவரைஅறியாத ஒரு கலைத்துப் போடும்மாய உலகிற்கு அழைத்துச் செல்கிறது. பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி அனுபவங்கள்கிடைக்கப் பெற்றிருக்கும்.மேடைஅமைப்பே தன்னை மண்ணோடு இணைத்துக்கொண்டது. மேடை ஒளியோ இயற்கையோடுஇணைந்திருந்தது. சில கதைகளில் நாம்தொலைந்து போவோம். ஆனால் இதில்நாம் பொம்மைகள் போலே தொலைந்து போனஆச்சரியம் அடைந்தோம். கிட்டத்தட்ட கண்கள் சிமிட்ட மறந்துபோனோம். பிள்ளைகளின் ரசிப்பும், ஆரவாரமும் அவர்கள் இந்த கதைகளின்ஊடாக பயணித்ததை போல இருந்தது. ஒருஇரவில் நமது பள்ளியில் பார்த்த, கேட்ட, உணர்ந்த அனுபவங்கள் எவ்வாறுநினைவில் விட்டு நீங்கும். நாளையசமூகத்தை கட்டமைக்கும் பொறுப்பில் இது ஒரு மைல்கல்.முருகபூபதிநாடகத்தை வார்த்தையில் பதிவிட்டுச் சொல்வது கடினம். வாய்ப்புகிடைக்கும் பொழுது ஒவ்வொருவரும் பார்த்துஅனுபவம் கொள்ள வேண்டிய படைப்புஅது. மீண்டும் பல இடர்பாடுகளைத் தாண்டிநவீன நாடகத்தை இராஜபாளையத்தில், ஆளந்தா பள்ளியில் காணத்தரும் கவிஞர் ஆனந்தி அவர்களுக்குவாழ்த்துகளும், அன்புகளும்.
0
Leave a Reply