ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில் (630.7 புள்ளி), மெஹுலி கோஷ் (630.3) முறையே 7, 8வது இடம் பிடித்து பைனலுக்கு முன் னேறினர்.
பைனலில் தமிழகத்தின் இளவேனில், 253.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் இளவேனில் கைப்பற்றிய 4வது தங்கம், 9வது பதக்கம். இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
இம்முறை சீனியர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம் இது. ஏற்கனவே இந்திய வீரர் அனந்த் ஜீத் சிங் நருகா ('ஸ்கீட்') > தங்கம் வென்றிருந்தார்.
பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இளவேனில், மெஹுலி, அனன்யா அடங்கிய இந்திய அணி, 1891.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றியது.
10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் ஜூனியர் பெண்களுக்கான ,ஷம்பவி (633.7), ஹ்ருத்ய ஸ்ரீ (632.1), இஷா அனில் (630.4) அடங்கிய இந்திய அணி, 1896.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.
0
Leave a Reply