இந்திய ஜோடி பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில், இரண்டாவது வெற்றி .
நேற்று பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் சீனாவின் ஹாங்சு நகரில், ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர்,கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' இடத்திலுள்ள நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
இம் முறை ஆண்கள் இரட்டையரில், இந்தியா சார்பில்உலகத் தரவ ரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்கிறது. 'டாப்-8' ஜோடி இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
முதல் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய ஜோடி, வெள்ளி வென்ற சீனாவின் லியாங் வெய், வாங் சங் ஜோடியை வென்றது.
‘நம்பர்-8' ஆக உள்ள இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான், சோகிபுல் பிக்ரி ஜோடியைநேற்று தனது இரண் டாவது போட்டியில் எதிர் கொண்டது.
இந்திய ஜோடி முதல் செட் 21-11, இரண் டாவது செட்டில் 11-11 என சமநிலையில் இருந்த இந்திய ஜோடி, கடைசியில் 16-21 இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டில் 21-11 என வெற்றி பெற்றது.
ஒரு மணி நேரம் நீடித்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-11, 16-21, 21-11 என வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது, இரு வெற்றியை பெற்ற இந்திய ஜோடி .
0
Leave a Reply