உலக கோப்பை செஸ் 11வது சீசன் 5வது சுற்றுக்கான முதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் ,ஹரிகிருஷ்ணா 'டிரா' .
உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில், நடக்கிறது.நேற்று நடந்த 5வது சுற்றுக்கான முதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். அர்ஜுன், 41வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மெக்சிகோவின் ஜோஸ்மார்டினெஸ் அல்காண்டாரா மோதினர். ஹரிகிருஷ்ணா, 41வதுநகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இன்று, 5வது சுற்றுக்கான 2வது போட்டியில் வெற்றி பெறும் வீரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். ஒரு வேளை போட்டி மீண்டும் 'டிரா' ஆனால், 'டை பிரேக்கர்' சுற்று நடத்தப்படும்.
0
Leave a Reply