ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி
ஒலிம்பிக்கில் தற்போது தனிநபர் வில்வித்தை போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான ரவுண்டு 32 போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி எஸ்.தோனியாவின் ரீனா பர்னத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இராண்டாவது சுற்றில் ரவுண்டு 16 தீபிகா குமாரி நெதர்லாந்தின் குயிண்டி ராபெனை சந்தித்தார். முதல் செட்டை 2-0 (29-25) 67601 கைப்பற்றிய இவர் அடுத்த செட்டை 27-29 என இழக்க, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. பின் சுதாரித்துக் கொண்ட இவர், 3, 4-வது செட்டை 25-17, 28-23 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ரவண்டு 16 முன்னேறினார். இதில் ஜெர்மனியின் மிட்செல்லியை ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திக்க உள்ளார்.ஆண்களுக்கான முதல் சுற்று ரவுண்டு 32 போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், பிரிட்டனின் டாம் ஹாலை எதிர்கொண்டார். இதில் தருணதீப் ராய் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
துப்பாக்கி சுடுதல் போட்டி, சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் நடக்கிறது. ஆண்களுக்கான ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு, தகுதிச்சுற்று போட்டி நடந்தன. இந்தியா சார்பில் ஸ்வப்னில் குசாலே, ஐஸ்வரி பிரதாப்சிங் களமிறங்கினர். மூன்று நிலைகளில் போட்டி நடந்தன. ஸ்வப்னில் மொத்தம் 590 புள்ளி எடுத்து 7வது இடம் பிடித்தார். டாப் 3 இடம் பிடித்தால் மட்டுமே பைனலுக்கு செல்லலாம். என்ற நிலையில் ஸ்வப்னில் பைனலுக்குள் நுழைந்தார். ஐஸ்வரி பிரதாப் 589 புள்ளி எடுத்து 11 வது இடம் பிடித்து வெளியேறினார் பெண்களுக்கான துப்பாக்கி சூடுதல் டிராப் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் ராஜேஸ்வரி, எஸ்ரோயாசி பங்கற்ேறனர். நேற்று இரண்டாவது நாள் தகுதிச்சுற்று நடந்தது இருவரும் மீண்டும் ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதையடுத்து ராஜேஸ்வரி 113 புள்ளி 22-வது ஸ்ரேயாசி 113, 23வது இடத்துக்கு தள்ளப்பட்டு பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினர்.
பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லவ்லினா, நார்வேயின் சன்னிவா ஹாப்ஸ்டாட் மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் 69கிலோ கைப்பற்றிய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்ககு நுழைந்தார்.
0
Leave a Reply