இந்தியாவில் வான்வழி டாக்சி சேவை அறிமுகம் . 7 நிமிடங்களில் டெல்லி டு ஹரியானா
இந்தசேவை2026ஆம்ஆண்டுபயன்பாட்டிற்கு வரவுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம்"இன்டிகோவைநிர்வகித்து வரும் இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியாவில் வான்வழி டாக்சி(AirTaxi) சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.அதன்படி டெல்லியின் கனௌட் பிளேஸ்இல் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு முதற்கட்டமாக வான்வழி டாக்சி சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த சேவை2026 ஆம் ஆண்டுபயன்பாட்டிற்கு வரவுள்ளது.வான்வழி டாக்சி சேவையானது பயணிகளை டெல்லியில் இருந்து ஹரியானாவிற்கு(125 கிலோமீட்டர்கள்) ஏழு நிமிடங்களில் அழைத்துசென்றுவிடும். இதற்கான கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் வான்வழி டாக்சி சேவையை கொண்டு வருவதற்காக இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் மற்றும் ஆர்ச்சர் ஏவியேஷன்நிறுவனங்கள் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் முற்றிலும்எலெக்ட்ரிக் திறன் கொண்ட வான்வழி டாக்சி சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது., இந்த சேவையை வழங்குவதற்காக இன்டர்குளோப் நிறுவனம் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட200மிட்நைட் டிரோன் விமானங்களை வாங்க இருக்கிறது. இதேபோன்ற சேவை மும்பை மற்றும் பெங்களூரு இடையேயும் அறிமுகம் செய்யப்படுகிறது.
0
Leave a Reply