ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் லக்சயா சென்
ஜப்பானில் நடைபெற்ற 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனல் நடைபெற்றது. இதில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கோகி வடனபேவை எதிர்த்து விளையாடினார்.
பரபரப்பான இந்தப் போட்டியில் முதல் செட்டை 13-21 என இழந்த லக்சயா சென், உடனடியாக எழுச்சி பெற்று இரண்டாவது செட்டை 21-18 எனக் கைப்பற்றினார். பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்கும் தீர்க்கமான 3வது செட்டில் அபாரமாக ஆடிய அவர், 21-14 என்ற கணக்கில் வென்று ஜப்பான் மாஸ்டர்ஸ் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
0
Leave a Reply