தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பைனலில் இந்தியா.
வங்கதேசத்தில், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 15வது சீசன் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின.
நேற்று நடந்த அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற பூடானை எதிர்கொண்டது. போட்டியின் 9வது நிமிடத்தில் இந்தியாவின் விஷ்ணு பி.வி. ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 27வது நிமிடத்தில் கொன்ஷாம் தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பூடானின் டாப்தென் (48வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இறுதி வரை போராடிய இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடரில் 14வது முறையாக பைனலுக்கு முன்னேறி அசத்தியது.
0
Leave a Reply