25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மல்லிகைப்பூ அழகு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்லிகைப்பூ அழகு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும்.

மல்லிகைப்பூ பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்கு தெரியாது. முறையாக பயன்படுத்தினால், இது பல உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும்.

 மல்லிகைப்பூ வயிற்றில் பூச்சிகள் இருந்தால், உடல் எடை குறைவதுடன், சருமத்தில் வெள்ளை நிறத் திட்டுகளும் தோன்றும். இந்த பிரச்சனைக்கு,4 மல்லிகைப் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால், குடலில் உள்ள நாடாப் புழு, மற்றும் கொக்கிப் புழு, போன்ற ஒட்டுண்ணிகள் அழியும். 

 மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, அதை தண்ணீரில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது.

வயிற்றில் புண் இருந்தால், அதன் அறிகுறியாக வாய்ப்புண் ஏற்படலாம். இதை சரிசெய்ய, மல்லிகை பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அது பாதியாக சுண்டிய பிறகு வடிகட்டி, காலை மற்றும் மாலை என இருவேளை அருந்தி வரலாம். இது வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஆகிய இரண்டையும் குணப்படுத்த உதவும்.

 மல்லிகை பூவின் எண்ணெயும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த பூக்களை மருத்துவ பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தும் முன், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News