25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விருதுநகரில் தேர்தல் விதிமீறல்,  அனுமதியின்றி வைக்கப்பட்ட 3 விளம்பரப் பலகைகள் அகற்றம் ,தேர்தல் மேற்பார்வையாளர் நடவடிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகரில் தேர்தல் விதிமீறல், அனுமதியின்றி வைக்கப்பட்ட 3 விளம்பரப் பலகைகள் அகற்றம் ,தேர்தல் மேற்பார்வையாளர் நடவடிக்கை.

206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர் நகராட்சிப் பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளைத் தேர்தல் அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர்.

விருதுநகர் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகளை மீறி மூன்று விளம்பரப் பலகைகள் (Flex Banners) வைக்கப்பட்டிருப்பதாக 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதித் தேர்தல் மேற்பார்வையாளர் திரு. நவ்நீத்குமார், I A S., அவர்களுக்குப் புகார் வரப்பெற்றது.

 அப்புகாரின் அடிப்படையில், தேர்தல் மேற்பார்வையாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட அந்த மூன்று விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டன.

தேர்தல் மேற்பார்வையாளர் எச்சரிக்கை:

 இது குறித்துத் தேர்தல் மேற்பார்வையாளர் திரு. நவ்நீத்குமார், I A S, அவர்கள் தெரிவிக்கையில்:

 "அரசியல் தொடர்பான விளம்பரப் பலகைகள் அல்லது பதாதைகளை உரிய அனுமதி பெறாமல் வைப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News