ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் அன்று ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசில் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்ஸவம் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜையின்போது 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசில் சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். கூடாரவல்லி உற்ஸவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 100 கிண்ணங்களில் அக்கார அடிசில் பெருமாளுக்கு படைக்கப்பட்டது.
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், சக்தி கண் மருத்துவமனை சார்பில் போலீசார், அவர்களது குடும்பத்தினருக்கு பொது மருத்துவ முகாம் நடந்தது.டி.எஸ்.பி., பஸினா பீவி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் நடந்த முகாமினை பரிசோதனை செய்து துவக்கினார். டாக்டர்கள் ராஜேஷ், ராதா தலைமையிலான மருத்துவ குழுவினர் போலீசார், குடும்பத்தினருக்கு பொது, கண், நுரையீரல், குடல் சம்பந்தமான அடிப்படை பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மருந்துகள் வழங்கினர்.இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என 500க்கும் அதிகமானோர் முகாமில் பங் கேற்றனர். ரோட்டரி சங்கதலைவர் ஸ்ரீமன் ராமச்சந்திர ராஜா, செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0
Leave a Reply