அரைக்கீரை போண்டா.
தேவையான பொருட்கள்-
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன் (மொறுமொறுப்புக்கு)
பொடியாக நறுக்கிய அரைக்கீரை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
சோம்பு - 1 சிறிய ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை-
கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்
கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம்,
கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக்
கலக்கவும்.
லேசாக தண்ணீர் தெளித்து, போண்டா சுடும் பதத்திற்கு மாவைப்
கெட்டியாகப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவைச் சிறிய
உருண்டைகளாக கிள்ளிப் போடவும்.
மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்து
எடுக்கவும்
மொறுமொறுப்பான மற்றும் சுவையான அரைக் கீரை போண்டா தயார்.
0
Leave a Reply