விளையாட்டு போட்டிகள் 6TH NOV 2026
ஐ.சி.சி. விருதுக்கு தீப்தி சர்மா பரிந்துரை.
ஐ.சி.சி. அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, ஆஸ்திரேலியாவின் அனாபெல், வங்கதேசத்தின் சோபனா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
உலக ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் நட்சத்திரங்கள்.
இந்தூரில் நவம்பர் 12 முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அத்வானி, நடப்பு பெண்கள் சாம்பியன் அனுபமா, மனன் சந்திரா, கீர்த்தனா, உமாதேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
0
Leave a Reply