25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மாவட்ட குறைதீர்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பிரிவு 27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறை தீர்ப்பு அலுவலராக திரு.மு.ஜெயபிரகாஷ் என்பவர் கடந்த 06.08.2025 முற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் பணியேற்பு செய்து பணிபுரிந்து வருகிறார்.

இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். பிரச்சனைகள் நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்வார். பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தங்களின் புகார்களை மனுக்களாக குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் mgnregsvnrombudsperson@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

                எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்  குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொது மக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அலுவலரான திரு.மு.ஜெயபிரகாஷ் என்பவர் 8925811346  என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News