25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கர்நாடக மாநிலத்தில் குட்டி தீவில் மண்டகட்டே பறவைகள் சரணாலயம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கர்நாடக மாநிலத்தில் குட்டி தீவில் மண்டகட்டே பறவைகள் சரணாலயம்!

நகரங்களில் வாகனங்களின் சத்தம், இரைச்சல் நம் காதுகளில் வலியை ஏற்படுத்தும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொக்கா மாவட்டத்தின் மண்டகட்டே கிராமத்தினர் கொடுத்து வைத்தவர்கள்.

இங்கு1.14 ஏக்கரில் அமைந்துள்ள குட்டித் தீவில், பல வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு, அவை எழுப்பும் சத்தம் காதுகளுக்கு ரீங்காரமாக ஒலித்து, புத்துணர்ச்சியை அளிக்கும்,

சோலாபூர், மங்களூரு நெடுஞ்சாலை அருகில், துங்கா நதி பாய்வதால், பறவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலையை அளிக்கிறது 

மே மாதத்தில் இனப்பெருக்க நோக்கத்துக்காக உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பறவைகள் மண்டகட்டேவுக்கு வருகின்றன.

இங்கு டார்ட்டர்ஸ், மீடியன் எக்ரெட்ஸ், கார்மோரண்ட்ஸ், மெய்டன் எக்ரட், பீய்டு கிங்பிஷர், வூலி நெக் ஸ்டாக், உட்பட பல வகையான பறவைகள் வருகின்றன.

உயரமான இடத்தில் நின்று பார்க்கும் வகையில், கண்காணிப்பு கோபுரமும் கட்டப்பட்டு உள்ளது. பறவைகளை அருகில் சென்று பார்க்கும் வகையில், படகு சவாரியும் இருக்கிறது.

ரயிலில் செல்வோர் ஷிவமொக்கா ரயில் நிலையத்தில் இறங்கியும்; பஸ்சில் செல்வோர், ஷிவமொக்கா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News