கால்நடைகளுக்கான, கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 31.07.2026 வரை 31 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பசு, எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 31.07.2026 வரை அனைத்து கிராமங்கள் /நகராட்சி / மாநகராட்சியில் செலுத்தப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,40,435 பசுக்கள் 865 எருமைகள் என மொத்தம் 1,41,300 கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் நோய் தடுப்பூசி (FMD) செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் நடைபெற உள்ளது.
இந்த நோய் தாக்கும் பட்சத்தில் கால்நடைகளுக்கு சரிவர உணவு உண்ண இயலாநிலை, அதீத காய்ச்சல் மற்றும் வாயில் உமிழ்நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் கால்நடைகளில் பால் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் இந்நோய் மிக விரைவாக பரவும் தன்மை கொண்டது.
இதனை தடுப்பதற்கு விருதுநகர் மாவட்டத்தில் 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் பணிபுரிவோரைக் கொண்டு ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி குழுவினரால் இலவசமாக FMD தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.
மேலும், தடுப்பூசி பணி முடிவடைந்த உடன் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் எண் மற்றும் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு வரும் OTP - யை தடுப்பூசி குழுவினருக்கு தெரிவித்து பாரத் பசுதான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நலத்திட்டங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply