காளான் புலவு
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பட்டன் காளான்- 12, பெரிய வெங்காயம் - 2, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுதூள் கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க 2: பட்டை லவங்கம், ஏலக்காய் தலா 2, எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை : காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.பாசுமதி அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பிறகு, காளானையும் சேர்த்து வதக்கி தயிரை அதோடு சேருங்கள். அத்துடன் கரம்மசாலா தூளைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு, ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்கு கிளறி மூடிவைத்து, ஒரு விசில் வந்தபிறகு, தீயைக் குறைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். விருந்துகளுக்கு ஏற்ற புலவு இது.
0
Leave a Reply