தமிழகத்தின் விஷால் சீனியர்' தடகள சாம்பியன்ஷிப்பில் தேசிய சாதனை.
மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64 வது சீசன் சென்னையில், நேற்று ஆண்களுக்கான 400மீ., ஓட்டம் பைனல் நடந்தது. தமிழகத்தின் விஷால் தென்னரசு 45.12 வினாடி நேரத்தில் கடந்து, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதற்கு முன் 2019ல் முகமது அனாஸ், 45.21 வினாடியில் கடந்து இருந்தார். தமிழகத்தின் மற்றொரு வீரர் ராஜேஷ் ரமேஷ் (46.04), ஹரியானாவின் விக்ராந்த் (46.17), வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
0
Leave a Reply