25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை (08.10.2026) கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவிகளுடன் அரசுப்பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிக்கு வரும் மாணவிகள் அரசு பேருந்துகளில் அல்லம்பட்டி விலக்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 700 மீட்டர் பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர். இதன் காரணமாக பள்ளிக்கு காலதாமதமாக செல்வதும், போக்குவத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. ஆகையால், பள்ளிக்கு சென்று வர ஏதுவாக பள்ளியிலிருந்து எம்.எஸ்.பி.நாடார் நகராட்சி பேருந்து நிலையம் வரை அரசுப் பேருந்து வழித்தட சேவை செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையினை ஏற்று  பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில், பள்ளி நேரங்களான காலை 08.20 மணிக்கு விருதுநகர் எம்.எஸ்.பி.நாடார் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பள்ளிக்கும் மற்றும் மாலை 04.05 மணிக்கு பள்ளியில்  இருந்து  புறப்பட்டு விருதுநகர் எம்.எஸ்.பி.நாடார் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு சென்றடையும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News