சத்தான பாசிப்பருப்பு புட்டு.
தேவையான பொருட்கள் -
200 கிராம் பாசிப்பருப்பு,5டேபிள்ஸ்பூன் நெய்,
10 முந்திரிப் பருப்பு,1/2 மூடி துருவிய தேங்காய்,
100 கிராம் சக்கரை,தேவையான அளவு உப்பு,
தேவையான அளவுதண்ணீர்.
செய்முறை -
முதலில் 200 கிராம் பாசிப்பருப்பை நாம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.
மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் முழுவதையும் நன்றாக வடித்து விட்டு வெறும் பருப்பை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நாம் இட்லி ஊற்றுவது போல் இட்லி சட்டியில் அரைத்த பாசிப்பருப்பு மாவை இட்லி போல் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இட்லி வெந்ததும் அதனை தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும் இட்லி ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் வைத்து இட்லி துண்டுகளை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காய் நெய்யில் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும்.
பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு இட்லி துருவலை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி, பிறகு அதனுடன் 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
இனிப்பை இன்னும் தூக்கி கொடுப்பதற்காக ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, ஒரு5 நிமிடம் வரை சிம்மில் அடுப்பை வைத்து கிளறி விட வேண்டும்.
மிகவும் ருசியான ஆரோக்கியமான சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பாசிப்பருப்பு புட்டு தயார் வாங்க சாப்பிடலாம்.
பொதுவாகவே பருப்பு வகைகளில் சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும்... புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
0
Leave a Reply