"கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்"; கீழ் சிறப்பு மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (20.07.2024) பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.பின்னர், 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 5 பயனாளிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தையும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும், குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த 3 தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசினையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். நோய் வரும் முன்னே மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், டாக்டர்.கலைஞர் அவர்கள் கொண்டு வந்த இந்த வருமுன் காப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர் என அனைத்து மருத்துவப்பணியாளர்களும் உங்கள் இருப்பிடத்தை தேடி வந்துள்ளார்கள். இதை நீங்கள் சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு நேரம் மற்றும் பணம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைத்து, எங்களுக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பு தந்த தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட பணிகளையும் செய்து முடிப்போம் என தெரிவித்தார்.
மேலும், இந்த முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலம் மருத்தும், குழந்தைகள் நல மருத்தும், குடல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், எழும்பு மூட்டு மருத்துவம், இருதய நோய் மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், நரம்பியல் மருத்துவம், முதியோர் நல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகளையும்,இரத்த முழு பரிசோதனை, இரத்த உறைதலை கண்டறிதல், இரத்த வகை கண்டறிதல், இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த கொழுப்பு அளவு, யூரியா அளவு, கிரியாட்டினின் அளவு, இரத்த தகவல் மற்றும் மலேரியா டைபாய்டு காய்ச்சல், எச்.ஐ.வி, சளி மாதிரி பரிசோதனை, பால்வினை நோய், சர்க்கரை நோய், எலக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், 2021 முதல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தலா 37 முகாம்கள் நடத்தப்பட்டு, 2021 -2022- ஆம் ஆண்டில், 24,313 பயனாளிகளும், 2022-2023 - ஆம் ஆண்டில், 39,017 பயனாளிகளும், 2023-2024 - ஆம் ஆண்டில் 38,654 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். 2024 - 2025 ஆம் ஆண்டில், 37 முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 3 முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2430 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.பின்னர், செம்பட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply