25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில்  (26.01.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார்அவர்களின்131வதுபிறந்ததினத்தைமுன்னிட்டுஅன்னாரதுசிலைக்குமாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தியாகி சங்கரலிங்கனார் தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் எனப் போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல் ஆவார்.இவர் 1895-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26-ஆம் நாள் பெரிய கருப்பசாமி நாடார் - வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார்.

 1914-ஆம் ஆண்டு பெண் கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1920-ஆம் ஆண்டு இராஜாஜியைச் சந்தித்தபோது அவரது சீடரானார். இவர் மாதர் கடமை என்னும் நூலை எழுதி வெளியிட்டார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப் பணியை மேற்கொண்டார்.திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாத சிறைத் தண்டனைப் பெற்றார். கரூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும், 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.தேசசேவையின் காரணமாக 1944-ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு, திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1951-ஆம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டார்.

இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்திய வழியில் அதிக நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் தியாகச் செம்மலாக சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார். தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.77 இலட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.மேலும், விருதுநகர் மாவட்டத்தில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளான  ஜனவரி 26 மற்றும் நினைவு நாளான அக்டோபர் 13 - ஆம் நாளன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் இன்று (26.01.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 131-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்    அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா.ஆனந்தி,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  திரு.பெ.ரா.வெற்றிவேந்தன்,  விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை  பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News