75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (26.11.2024) 75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை எல்லோர் மனங்களிலும் விதைத்து, நமது இந்திய நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாகப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் வாசிக்க அனைத்து அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்தனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்திய அரசியலமைப்பின் வரலாறு, அரசியலமைப்பின் முக்கிய சரத்துக்கள், அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற விருதுநகர் அ.ச.ப.சி.சி நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசாக ரூ.10,000/- ம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டாம் பரிசாக ரூ.7,500/-ம், சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000/-ம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளிகளுக்கு பரிசு தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், அரசு அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- ம், இரண்டாம் பரிசாக ரூ.7,500/-ம், மூன்றாம் பரிசாக ரூ.5000/-ம் பரிசு தொகைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராஜேந்திரன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திரு.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply