கிரிக்கெட் செய்திகள்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இதன் இரண்டாவது இன்னிங்சில் 161 ரன் எடுத்த ஜெய்ஸ்வால், வெற்றிக்கு கை கொடுத்தார். இடது கை பேட்டரான இவர், இந்திய அணிக்காக விளையாடும் கனவுடன் 10 வயதில் மும்பைக்கு வந்தார். மனஉறுதியுடன் போராடி இந்திய லெவனில் இடம் பிடித்தார் துணிச்சலாக விளையாடுகிறார். சச்சின், கோலி வழியில் இந்தியாவின் சிறந்த பேட்டிங் பாரம்பரியத்தை தொடர்கிறார்.
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டம், உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன டிராவிட் போன்றோர் வழிகாட்ட, தேசிய கிரிக்கெட் அகாடமி சிறப்பாக செயல்படுகிறது. உள்ளுரில் ஜீனியர் அளவிலான போட்டிகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றனர். 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் பங்கேற்பவர்கள் கூட சீனியர் வீரர்கள் போல திறமை யானவர்களாக உள்ளனர் இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதற்கு ஜெய்ஸ்வால் பயணம் சிறந்த உதாரணம்
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் 43 ஐந்து டெஸ்ட் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றார். இவரது பயிற்சியில் இந்திய அணி பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் டிசம்பர் 6-10 ல் நடக்கவுள்ளது. இதற்கு முன் இன்று கான்பெரா செல்லும் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் இரு நாள் கொண்ட, பகலிரவு பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளது. இப்போட்டி நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடக்க உள்ளது.
இதற்க இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியாளர் காம்பிர், குடும்ப சூழல் காரணமாக நேற்று இந்தியா திரும்பினார். அடிலெய்டு டெஸ்ட் துவங்கும் முன் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைப் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர், மார்கல் இணைந்து இந்திய வீரர்களுக்கு உதவலாம்.
ஐ.பி.எல்.,ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில், '13 வயது மாணவன் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு வாங்கினோம். இவரது பேட்டிங் திறமை பட்டை தீட்டப்படும் என்றார்.
0
Leave a Reply