நிலம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1847 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், (26.11.2024) நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் தொடர்பான மனுக்கள் அதிக அளவில் அளிக்கப்படுவதால் மேற்படி நிலம் சார்ந்த பொருள்கள் தொடர்பான மனுக்களுக்கு உரிய தீர்வு வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு குறைதீரக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நவம்பர்- 2024 மாதத்திற்கான சிறப்பு நிலம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா இரத்து, இலவச வீட்டுமனைப்பட்டா, நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 1847 மனுக்கள் பெறப்பட்டது.பெறப்பட்ட மனுக்களை தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்களுக்கும், வருவாய் வட்டாட்சியர்களுக்கும், தொடர்புடைய துறைக்கும் இனம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.அமர்நாத், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply