IPL கிரிக்கெட்டில் வீரர்கள் மெகா ஏலம்
இந்தியன் பிரிமியர் லீக் IPL 18-வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி துவங்குகிறது. இதற்கான வீரர்கள் மெகா ஏலம், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாள் நடந்தது. நேற்று இரண்டாம் நாள் ஏலம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ராவ்மன் பாவெல், ரூ.1.50 கோடிக்கு கோல்கட்டா அணியில் ஒப்பந்தமானார். முன்னாள் பெங்களூரு கேப்டன் ரபிளசியை, ரூ.2 கோடிக்கு டில்லி அணி வாங்கியது தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ரூ.3.20 கோடிக்கு குஜராத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்செனை, ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணி தட்டிச் சென்றது.
இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 8 வீரர்கள்.
புவனேஷவர் இந்தியா - பெங்களூரு அணி ரூ.10.75 கோடி,
தீபக் சகார் இந்தியா - மும்பை அணி ரூ.9.25 கோடி
முகேஷ் குமார் இந்தியா - டில்லி அணி ரூ.8.00 கோடி
ஆகாஷ் தீப் இந்தியா - லக்னோ அணி ரூ.8.00 கோடி
யான்சென் தென் ஆப்பிரிக்கா -பஞ்சாப் அணி ரூ.7.00 கோடி
தேஷ்பாண்டே இந்தியா - ராஜஸ்தான் அணி ரூ.6.50 கோடி
குர்னால் இந்தியா பெங்களுரு அணி ரூ.5.75 கோடி
ஜாக்ஸ் இங்கிலாந்து / மும்பை அணி ரூ.5.25 கோடி
இளம் வீரர் வைபவ் நேற்றைய ஏலத்தில் இளம் வைபவ் சூர்யவன்ஷி (13 ஆண்டு 243 நாட்கள்) இடம் பெற்றிருந்தார். அடிப்படை ஏலத்தொகையான ரூ.30 லட்சத்திற்கு இவரை ஒப்பந்தம் செய்ய டில்லி, ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டன. முடிவில் ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. IPL ஏல வரலாற்றில் வாங்கப்பட்ட இளம் வீரரானார்.
0
Leave a Reply