மூன்றாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாக கொண்ட வண்ணச் சிறுகதைகள், எழுத்தார்வம் மிக்கோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன
விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத்திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் “மரமும் மரபும்” அதாவது சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.
இது தொடர்பாக கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாக கொண்ட வண்ணச் சிறுகதைகள் எழுத்தார்வம் மிக்கோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறுகதைகள் குறைந்தது ஐந்து முதல் பத்து பக்கங்களுக்கு எழுதி shortstoriesvnrdt2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
குழு நடுவர்கள் மூலம் சிறப்பாக எழுதி அனுப்பப்படும் சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ10,000 ஆறுதல் பரிசு 5 நபர்களுக்கு ரூ5,000 வீதம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். மேலும், தேர்ச்சி பெறும் சிறுகதைகள் 3-ஆவது புத்தகத் திருவிழா மலரில் இடம்பெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply