பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன்படி பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும்.
மே-2025 மாதத்திற்கான குறைதீர் முகாம் வருகின்ற 10.05.2025 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடும்ப அட்டை தொடர்பான குறைகளுக்கு மனு செய்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்பது தெரிவிக்கப்படுகிறது.
0
Leave a Reply